Categories
உலக செய்திகள்

இந்த பதவி எனக்கு வேண்டாம்… துணிச்சலுடன் தூக்கிப்போட்ட நாசா அதிகாரி…!

ஜோ பைடன் பதவி ஏற்பார் நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு விலகினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் டிராம்பின் மூலம்  ஜிம் பிரிடென்ஸ்டைன் என்பவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றதால், நாசாவின் தலைமை நிர்வாகி பதவியை விட்டு  ஜிம் பிரிடென்ஸ்டைன் விலகினார். அந்த பதவிக்கு முதல் முறையாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் அலுவலக வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து  ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்திருப்பதாவது, தேசிய விண்வெளி கவுன்சில் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் போன்றவற்றிற்கு, அமெரிக்க அதிபருடன் நெருங்கிய உறவை கொண்ட ஒருவர் தேவை. ஆனால் அமெரிக்க அதிபரின் புதிய நியமனத்தால் நான் அதற்கு சரியான நபராக இருக்க மாட்டேன். என்னுடைய இந்த முடிவு நாசாவின் சிறந்த நலன்களுக்கு உதவும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |