Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’… தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் தெரியுமா?…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் ?என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‌இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம்  வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது .

A Year Without Master: How The Trade And Fans Are Reacting To The Delayed  Release Of Vijay's Film Due To Covid19

உலக அளவில் இந்த படம் 200 கோடியையும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கோடி வரையும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சன் தொலைக்காட்சியில் வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |