Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது தாண்டா இந்தியா” நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு…. வியந்து போன ஷேவாக்…!!

நடராஜனுக்கு ஊர்மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நம்பமுடியாத வகையில் இருப்பதாக ஷேவாக் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். பின்னர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று பல சாதனைகளை படைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நடராஜனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு மலர்கள் தூவி நடராஜனுக்கு மேளதாளத்துடன் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக ஊர்க்காரர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதை பார்த்த முன்னாள் அணித்தலைவர் வீரேந்திர சேவாக், “இதுதான் இந்தியா,  இங்கே கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டு கிடையாது. அதற்கு மேலும் அதிகமாக பார்க்கப்படுகிறது. நடராஜனின்  சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது நம்ப முடியாத வகையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |