Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் “ஒரு கொரோனா”…. உதயநிதி ஒரு “உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் விமர்சனம்…!!

ஸ்டாலினை கொரோனா என்றும், உதயநிதியை உருமாறிய கொரோனா என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். அப்போது, “சிலர் கட்சியை தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கூட கொடுக்க முடியாத ஒருத்தர் இன்றைக்கு கட்சி வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மேலும் வாக்காளரிடம் கடன் வைத்த ஒருவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் மு.க ஸ்டாலின் ஒரு கொரோனா என்றும், உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா என்றும் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பெண்களை தரக்குறைவாக பேசிவிட்டார். ஆனால் அதை ஸ்டாலின் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் என்றும்.

Categories

Tech |