Categories
லைப் ஸ்டைல்

” கழிப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்”… அப்ப கட்டாயம் இத படிங்க..!!

செல்போன் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .எங்கு சென்றாலும் செல்போன் இல்லாமல் செல்வதில்லை. அந்த வகையில் கழிப்பறைக்குச் செல்லும் போது கூட ஒருசிலர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர். வயதானவர்களிடம் மட்டுமே இருந்து வந்த மூலநோய் பிரச்சினை தற்போது இளைஞர் இடமும் அதிகரித்து வருகிறது. கழிப்பறைக்கு மொபைல் போனை எடுத்து செல்பவர்களுக்கு மூல பிரச்சினை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மொபைல் பயனாளர்கள் கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு நேரம் போவதே தெரியாததால் மூல நோய் ஆபத்து ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். கழிப்பறையில் அமர்ந்து ஒரு சிலர் செய்திகளை படுகிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கின்றனர். இதனால் உடலின் தசைகளில் நரம்புகளின் மீது அழுத்தம் ஏற்பட்டு மூல நோய் ஏற்படுகின்றது. கழிப்பறைக்கு மொபைலை எடுத்து செல்லும்போது பல கிருமிகளும் செல்போனுக்கு நுழைகின்றது. இதன் காரணமாக பல தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Categories

Tech |