Categories
உலக செய்திகள்

எங்களுக்கே தீங்கு நினைக்கிறீங்களா… இப்ப போடுறோம் பாரு தடை… சீனாவால் ஆடிப்போன அமெரிக்கா…!!

சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் உட்பட 28 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவின் இன்றியமையாமையை பாதிக்கும் வகையில் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மைக் பாம்பியோ

பெய்ஜிங்

இதனால் அவர்கள் சீனாவின் முக்கிய பகுதிகளான ஹாங்காங், மக்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தார்களும் இப்பகுதிகளுக்கு செல்ல தடை போடப்பட்டுள்ளது.அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் யாரும் சீனாவில் வணிக ரீதியாக பணிகளை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இன்றியமையாமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு நலன் கருதி சீன அரசாங்கம் அவற்றைக் காப்பாற்ற உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |