Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு ஊழியர்களாக மாற்றுங்க…. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்…!!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது விழுப்புரம் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதோடு ஒன்றிய தலைவர் கிறிஸ்டினா மேரி, மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய செயலாளர் சரளா மற்றும் ஒன்றிய பொருளாளர் குமாரி போன்றோர் இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்று கூறினர். அதோடு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும்போது ஊழியருக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டுமெனவும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் விஜயா, பிரியா, சாந்தா போன்ற பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |