Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் உடற்கூறு ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் யானையின் காது பகுதிகளில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஆகியவற்றால் தீ வைத்து ஏரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.

இக்காயங்களினால் யானையின் காதில் இருக்கும் நரம்புகள் அறுபட்டுள்ளது. இதனால் காதிலிருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் தான் உயிரிழந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக யானையை தாக்கியதாலேயே உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கொடூரமாக யானையை தாக்கியவர்களை விரைவில் பிடிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் யானையின் மீது டயரில் வைத்து எரிக்கும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ரைமன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |