Categories
உலக செய்திகள் விளையாட்டு

தைரியத்தின் ஆசானே… வெற்றிக்கு நீ தான் காரணம்… இந்தியாவை புகழும் பாகிஸ்தான்…!

இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தன் பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமை படுத்துகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தனது பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமையாக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ராகுல் டிராவிட், அண்டர்-19, இந்தியா ஏ உள்ளிட்ட அணிகளை தனது பயிற்சியின் கீழ் திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளார். இதனை யாராலும் மறுக்க முடியாது.

அதுமட்டுமின்றி அவரிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் அவரைப்போல் மனரீதியாகவும் வலிமை படுத்தியுள்ளார். ஏனென்றால், இந்திய அணி விராட் கோலி தலைமையிலான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த போதிலும், முன்னணி வீரர்கள் படுகாயம் காரணமாக விலகிய போதும், இந்திய அணியில் இளம் வீரர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினர். இதற்கு ராகுல் டிராவிட்டே முழு காரணமாவார் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

Categories

Tech |