தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா, மலேசியாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டனர்.
இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அஸ்வினி பொன்னப்பா இணைக்கு அதிர்ச்சியளித்தது. அதன்பின் இரண்டாவது செட்டில் அதிரடியாக ஆடிய அஸ்வினி பொன்னப்பா 24-22 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி தோல்வியை தவிர்த்தார்.
மூன்றாவது செட் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 22-20 கணக்கில் வென்றது. இதன் மூலம் மலேசியாவின் இணை ஆட்டக்காரர்களை வென்று இந்திய அணி தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.