Categories
லைப் ஸ்டைல்

செரிமான பிரச்சினையா…? காலையில் இந்த பானத்தை குடிங்க…. அப்புறம் தெரியும்…!!

செரிமான பிரச்சினைகளை தடுக்க என்னென்ன பானங்களை காலையில் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பலரும் செரிமான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பது ஆகும். அது மட்டுமின்றி இரவு உணவுக்குப் பின் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாக விடுகிறது. இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்ச கூடியதாக இருப்பதால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சில பானங்களை அருந்தும்போது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதோடு நாள் முழுதும் சிறப்பாகவும் செயல்பட முடியும்.

இதோ உங்களுக்கான பானம்:

1.காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால், இது உடல் எடையை குறைப்பது, சரும பிரச்சனைகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை தூண்டுவது, அதிக உணவை உண்ணுவதை குறைப்பது, செரிமானத்தை மேம்படுத்தும்.

2.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். உடலை பராமரிக்க உதவும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

3.எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்த்து குடிப்பது செரிமான மண்டலத்தை வலிமைப்படுத்தி குமட்டல், நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும்.

4.பட்டை, மிளகு மற்றும் மஞ்சள் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வெதுவெதுப்பான நிலையில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் குடிப்பதால் குளிர்காலத்தில் சந்திக்கும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

5.காலையில் எழுந்ததும் துளசி டீ குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். சரும பிரச்சனைகளைப் போக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். பானத்தின் சுவையை மேம்படுத்த அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

6.சுவாசப் பாதையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க நினைத்தால் இந்த பானத்தை அருந்துங்கள். காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன், துருவிய இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள்.

Categories

Tech |