கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ குறித்து அனிகா விளக்கம் அளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன் . இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்தார் . இந்நிலையில் கருப்பு நிற உடையில் ஒரு பெண் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது .
அந்த பெண் பார்ப்பதற்கு அனிகா போலவே இருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இந்த வீடியோவுக்கு விளக்கமளித்த அனிகா ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. நான் இப்படி எல்லாம் பண்ண மாட்டேன். அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ . இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை . இந்த வீடியோவை பார்த்த போது நானே அதிர்ச்சி அடைந்தேன். ஆன்லைனில் இருந்து இந்த வீடியோவை எடுக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது’ என தெரிவித்துள்ளார்.