நமக்கு நக சுத்தி வந்தால் அது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு, அதிக வலியையும் உண்டாக்கும். நம் வீட்டு பெரியவர்கள் கைகளில் அல்லது கால் நகங்களில் நகச்சுத்தி வந்தால் தாமதிக்காமல் கைவைத்தியம் மூலமே சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அவை நாள்பட்டால் அதிக விளைவை ஏற்படுத்தும் சமயத்தில் விரல் எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
1.வேப்பிலையை கைப்பிடி அளவு இலை எடுத்து தூசி போக அலசி விட்டு, பின்னர் அத்துடன் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து மருதாணி கலவை போல் நகச்சுத்தி இருக்கும் இடங்களில் போட்டு விடவும். இதை இரவு நேரத்தில் வைத்திருந்தால் நகச்சுத்தி குணமாகும்.
2. இது இன்னொரு வைத்திய முறை
சின்ன வெங்காயம் – 5
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வசம்பு தூள் – 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து அரைத்து நகச்சுத்தி வந்த இடத்தில் போட வேண்டும். பிறகு மெல்லிய துணியால் கட்டி விடவும். இதை தொடர்ந்து ஒரு வாரம் வரை போட்டு வந்தால் நகச்சுத்தி சரியாகிவிடும்.