முதல்வர் பழனிசாமி தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொதித்தெழுந்துள்ளார்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் “நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை, நீட் தேர்வு, மேகதாது பிரச்சனைகளை முறையாக எதிரொலிக்காமல், தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது!
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஜிஎஸ்டி இழப்பீடு,உள்ளாட்சி நிதி,மாநில அரசு நிறைவேற்றிய பல்வேறு மத்திய திட்டங்களுக்கான நிதி, பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட 17,351 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
#NITIAayog கூட்டத்தில் காவிரி பிரச்சனை, நீட் தேர்வு, மேகதாது பிரச்சனைகளை முறையாக எதிரொலிக்காமல், தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது!
— M.K.Stalin (@mkstalin) June 16, 2019