Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் தான் போவீங்களா..? ரேஷன் கடைக்கு சென்ற கரடி… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது.

அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு போன்ற அனைத்து பொருட்களையும் நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் கரடி வருவதை தடுப்பதற்காக ரேஷன் கடையின் முன்பு இரும்பு தகரம் மற்றும் கற்கள் கொண்டு தடுப்பு ஒன்றை வைத்துள்ளனர். மேலும் அட்டகாசம் செய்து வரும் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |