பிளாக் காபி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க இது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காப்பி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பிளாக் காபி வல்லமை கொண்டது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது.
பசி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. பிளாக் காபியில் உள்ள கஃபைன் ஆற்றல் பூஸ்டராக செயல்படுகிறது. அதிகப்படியான கலோரிகளை எதிர்த்து உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. உடலில் நீரின் அளவு அதிகமாக இருந்தாலும் எடை அதிகரிக்கும். பிளாக் காபி குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். இது கெட்ட நீரை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது. எடை இழப்பு செயல்முறை விரைவாக செய்யத் தூண்டும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் உள்ளது. இது மட்டுமில்லாமல் குளுக்கோஸ் உற்பத்தியை குறைக்கும். எனவே தினமும் பிளாக் காபி குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.