அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுகொண்டாண்டனர். இதையடுத்து ஜோ பைடன் காலதாமதம் இல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிரித்து பணிகளை தொடங்கினார். முதல் நாள் முக்கிய முடிவுகளாக முன்னாள் அதிபர் டிரம்ப் பின் உத்தரவை முதல் கையெழுத்துப் போட்ட ஜோ பைடன் நீக்கியுள்ளார். தற்போது அது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமியர்கள் அமெரிக்கா செல்வதற்கான தடை நீக்கம்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது.
அமெரிக்கா – மெக்சிகன் சுவர் கட்டும் பணி நிறுத்திவைப்பு
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது நிறுத்திவைப்பு
சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைக்கும் திட்டம் ரத்து
புலம்பெயர்ந்தவர்களை கணக்கிடுவதற்கான தடை நீக்கம்
பள்ளிகளில் நாட்டுப்பற்று பாடம் எடுக்கும் முடிவு ரத்து
100 நாட்கள் கட்டாயம் முக கவசம் என அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.