கொரோனா தொற்று காரணமாக பெரிய வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவு உள்ள வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி பரப்பளவு குறைந்து கொண்டே வரும் என்றும் கடந்த ஆண்டு இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 2019 சராசரி பரப்பளவு 50 சதுர அடியாக இருந்த நிலையில் 2020இல் 150 அடியாக மாறியுள்ளது.