சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.
இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பிரச்சனை மீண்டும் வெடிக்கவே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமனாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் குமார். ஹேமலதா மற்றும் அவரது பிள்ளைகள் கண் முன்னால் இந்த கொடூரக்கொலை அரங்கேறியது. இந்த சம்பவத்தில் குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.