பொடுகு தொல்லையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி போக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
பொடுகு தொல்லையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறிப்பாக உடலில் ஏற்படும் அதிக சூட்டினால் ஏற்படுகின்றது. பொடுகு பிரச்சினை காரணமாக முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தற்போது இந்த பொடுகு தொல்லையை நீக்குவதற்கான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவில் கலந்து தலையில் நன்றாக மசாஜ் செய்து பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.
தயிருடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து உச்சந்தலையில் தடவி 15 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.