யானை மீது டயரை கொளுத்தி போட்டு கொலை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அதை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே குறிப்பிட்ட யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்த விசாரணையில் யானையானது தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பக்கத்தில் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்றி கொளவதற்காக டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி யானையின் மீது வீசியுள்ளனர்.
இதனால் யானையின் தலையில் தீ பற்றி எரிந்து காதுகள் கிழிந்த நிலையில் ஓடியுள்ளது. இதையடுத்து நீலகிரி இப்பகுதியைச் சேர்ந்த ரேமண்ட், பிரசாத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரையன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நடத்தி வந்த 3 விடுதி அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று தங்களுடைய சோகத்தை பதிவிட்டு வருகின்றனர்.