Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கையும் சரியாகல…. என்ன செய்றதுன்னு தெரியல… வியாபாரியின் விபரீத முடிவு….!!

உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை.

இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |