Categories
உலக செய்திகள்

கொரோனா – பெரிய வீடு விற்பனை அதிகம்…!!

கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவுள்ள பெரிய வீடுகள் விற்பனையாவதாக சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகி வருகின்றனர். மேலும் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. தற்போது ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவிலான வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி பரப்பளவு குறைந்து கொண்டே வரும் என்றும், கடந்த ஆண்டு இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 2019 இல் சராசரி பரப்பளவு 50 சதுர அடியாக இருந்த நிலையில் 2020 இல் 150 அடியாக மாறியுள்ளது.

Categories

Tech |