குடும்பத்தோடு சென்றால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று புனே அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் முகக் கவசம் அணிதல் என்பது கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனேவில் குடும்பத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தால் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என்று புனே மேயர் முர்லிதர் மோஹல் தெரிவித்துள்ளார். அதே வேளையில் ஓலா, உபர் போன்ற பயணிகள் நான்கு சக்கர வாகனங்களுக்கு மாஸ்க் கட்டாயம் என்ற முறை அப்படியேதான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.