சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருவதாக பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் உடல்நல குறைவு காரணமாக சசிகலாவின் விடுதலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.