Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி முனையில் கொள்ளை” மாநிலம் விட்டு பறந்த கும்பல்…. ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை…. 12 கோடி மதிப்பிலான நகை மீட்பு…. 6 பேர் கைது…!!

துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலத்திற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடகா மாநில எல்லைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு சோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்குரிய சிலர் ஹைதராபாத் சென்றிருப்பதாக தகவல் வந்தது. அதேபோன்று அவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்தனர்.

அதில் துணை கண்காணிப்பாளர்கள் முரளி, சரவணன் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், சரவணன், விஜயகுமார் ஆகிய 5 பேர் ஹைதராபாத்தில் தங்கள் விசாரணையை தொடங்கினர் அப்போது ஹைதராபாத்தின் அருகே இருக்கும் சம்சாத்பூர் என்னுமிடத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் காவல் துறையினரின் உதவியுடன் குற்றவாளிகள் பதுங்கியிருக்கும் பகுதிக்கு சென்று சுற்றிவளைத்த காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஏழு கை துப்பாக்கிகள், இரண்டு கத்திகள் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஹைதராபாத் காவல் துறையும் உறுதி செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக காவல்துறை சிறிது நேரத்தில் வெளியிட உள்ளது.

Categories

Tech |