Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி நீங்க ரெடியா?… ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதல்வர்…!!!

துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சி தலைவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை செல்வபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். அப்போது தமிழக அரசின் திட்டங்களுக்கு திமுக தடையாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்த புகாரில் உண்மை இல்லை. துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

Categories

Tech |