Categories
பல்சுவை

வரமாய் கிடைக்கும் பெண் குழந்தைகள்…. போற்றி பாதுகாக்கும் நாள்…. தேசிய பெண் குழந்தைகள் தினம்…!!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு 

பெண் குழந்தைகளின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2008ஆம் வருடம் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டுவரப்பட்டது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வளவு பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை பெற்றோர்கள் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தற்போதைய காலத்தில் ஆண் பெண் என இருவரும் வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். பெண் குழந்தைகளை 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்து கொடுப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் தற்போது இதுபோன்ற குழந்தை திருமணங்கள் குறைந்திருந்தாலும் நிரந்தரமாக முடிவுக்கு வரவில்லை.

நாடு முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 33.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற பிரிவு மையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கள்ளிப்பால் கலாச்சாரமும் கரும்பலகை இல்லாத மாநிலமும் இன்றும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றது. எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கு நாம் துணையாக நிற்போம்

Categories

Tech |