உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டின பகுதியில் கடந்த 18ஆம் தேதி 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் படகில் கடுமையாக மோதி தாக்குதல் ஏற்படுத்தினர். இதனால் படகு நீரில் மூழ்கி 4 மீனவர்களும் உயிர் இழந்தனர். இதையடுத்து தமிழக மீனவர்களின் 4 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்து இன்று ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இலங்கை கடலோர காவல் படை, இந்திய கடலோர காவல் படையினரிடம் 4 மீனவர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளது. இதையடுத்து 4 மீனவர்களின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலமாக கோட்டைபட்டினம் வந்து சேரும் என்று கூறப்பட்டது. மேலும் கோட்டைப்பட்டினம் வந்ததும் 4 மீனவர்களின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.