சசிகலாவை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விடுதலையாக உள்ள நிலையில் திடீரென கொரோனா பரவியது எப்படி என அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுப்புவதாக தெரிவித்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாடுவது ஏன் ? என்பதற்கு கர்நாடக அரசும், தமிழக முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டுமென பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் விடுதலையாகும் காலத்தில் இவ்வளவு காலம் கொரோனா வராமல், இப்போது ஏன் கொரோனா வந்தது என பொதுமக்களிடம் கேள்வி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.