கொரோனா தடுப்பூசியின் திறன் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா ? என அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு புதிய நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கி வருவதாகவும், தடுப்பூசி திறன் குறித்து பரப்பப்படும் பொய்யான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.