எந்த வகை சருமத்திற்கு எந்த வகை பழச்சாறுகளை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்பதை இதில் பார்ப்போம்.
எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும்:
திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும்.
சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை மினுமினுப்பாக்கும்.
ரசாயன பொருட்கள் சேர்ந்து பிளீச்சை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படுபவர்கள் சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும். கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.
சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை மட்பேக் குடன் சேர்த்து பயன்படுத்துங்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும்.
ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.