கடகம் ராசி அன்பர்களே..!
இன்று பயணங்களின் போது கவனம் தேவை.
குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் உண்டாகும். தேவையில்லாத குழப்பங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். கிடைக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். முன்கோபத்தை இன்று நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.