Categories
தேசிய செய்திகள்

நீங்கள் சிலிண்டர் இப்படி புக்கிங்க் செய்தால்…. ரூ.700 தள்ளுபடி செய்யப்படும்…!!

சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது கேஷ் பேக் சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சிலிண்டர் வாங்குவது கொஞ்சம் சிரமம். வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தற்போது செல்போன் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர்.

செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த முறையை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். paytm செயலி மூலமாக சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்தால் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது. இந்த செயலி மூலமாக முன்பதிவு செய்தால் உங்களுக்கு ரூ.500 வரையில் கேஷ் பேக் கிடைக்கும். paytm செயலி மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி புக் செய்வது.?

1.முதலில் paytm ஆப்பில் உள்ள Book Cylinder என்ற வசதியில் சென்று உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2.அதில், Bharat gas, Indane மற்றும் HP Gas ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர்கள் இருக்கும்.

3.பின்னர் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4.அதன் பின்னர் உங்களது செல்போன் எண் அல்லது எல்பிஜி ஐடி எண்ணை பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும்.

5.நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.

6.அதற்கு முன்பாக FIRSTLPG என்ற புரோமோ கோடை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ரூ.700 வரையில் கேஷ் பேக் கிடைக்கும்.

எனவே உடனடியாக உங்களது சிலிண்டர் முன்பதிவுக்கு பேடிஎம் செயலியைப் பயன்படுத்தி கேஷ் பேக் சலுகையைப் பெறுங்கள். இந்த சலுகை ஜனவரி 31 வரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சலுகை முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.

Categories

Tech |