Categories
அரசியல் சற்றுமுன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை – துணை முதல்வர் அதிரடி ட்விட் …!!!

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான ட்விட் பதிவை பதிவிட்டிருக்கிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்தும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தான் என்று சொல்லியிருக்கிறார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அம்மா அரசு உறுதியான நிலைப்பாட்டு என்ற பதிவிட்டுள்ள அவர்,

விரைவில் நல்ல தீர்வு வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் அந்த டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருக்கிறார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே குடியரசுத் தலைவர்தான் அதற்கான முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டது.

பின்னர் மீண்டும் ஆளுநரே அதற்கான இறுதி முடிவு எடுப்பார்  என்று சொல்லியிருந்தார்கள் இந்த தருவாயில் அரசியல் கட்சிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது நிலைபாடாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தநிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |