Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.160 இருந்தால் போதும்…. ரூ.23 லட்சம் சூப்பரா சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா…??

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.

இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

எல்ஐசி திட்டம்:

எல்ஐசி நிறுவனத்தின் நியூ மணிபேக் பாலிசி திட்டத்தின் மூலமாக சிறிய தொகையை தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமாக குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இரண்டு வசதிகளை தேர்ந்தெடுக்கலாம். ஒன்று 25 வருடங்கள் 20 வருடங்கள் பாலிசி. இந்த வருடத்தின் கடைசியில் சேமிப்பு பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினமும் ரூ.160 சேமித்து வந்தால் 25 வருடங்களில் 23 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

5 வருடத்தில் பணம் :

எல்ஐசியின் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் 15 முதல் 20 சதவீத தொகையை பெற முடியும். இதோடு முதிர்வு காலத்தில் போனஸ் பணத்தொகையும் கிடைக்கும்.

முதலீடு எவ்வளவு?

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுதிப்பணம் ரூ.1 லட்சம். அதிகபட்ச வரம்பு கிடையாது. பதிமூன்று வயது முதல் 50 வயது வரை இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். வருடாந்திர தொகையாக ரூ.60,025. ஆறு மாதங்களுக்கு பிரிமியம் தொகையாக ரூ.30,329, மூன்று மாதங்களுக்கு பிரிமியம் தொகையாக ரூ.15,323 மற்றும் மாதத்துக்கு ரூ.5,108 பிரீமியம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |