Categories
டெக்னாலஜி பல்சுவை

“Youtubeபில் மொத்தமாக வீடியோ டவுன்லோடு செய்வது எப்படி”..? வாங்க பார்க்கலாம்..!!

யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடுயூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும்.

உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில  வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் பதிவிறக்கம் செய்யவுள்ள ப்ளேலிஸ்டின் லிங்கை பதிவிட்டு மொத்தமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதேபோல் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் YouTubePlaylist.cc என்ற இணையதளத்தையும், ஆண்டிராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் Videoder என்ற செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்தும் உங்களது வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |