Categories
தேசிய செய்திகள்

மோடி தமிழக மக்களை…. இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் – ராகுல் காட்டம்…!!

தமிழக மக்களை மோடி இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளார். அப்போது கே.எஸ் அழகிரி உடன் இணைந்து கோவையில் தன்னுடைய பரப்புரையை தொடங்கி பேசிய ராகுல் காந்தி, “தன்னுடைய வருகைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து “மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும், அந்த முயற்சியை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக கலாசாரத்தை மோடி ஏற்கவில்லை, தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக தான் மோடி பார்க்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |