காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் ஆதனூர் காலனியில் ஜானகிராமன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் மற்றும் ரோகித் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கோடீஸ்வரி ஜானகிராமன் வேலைக்கு புறப்பட்டு சென்ற உடன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.