Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

17 வயசுதான் ஆகுது…. நிறுத்தப்பட்ட திருமணம்… எச்சரிக்கப்பட்ட பெற்றோர்… அதிரடி நடவடிக்கை…!!

மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் பிளஸ் டூ படித்து முடித்துள்ள 17 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் உறவினர் மகனான அருண்குமார் என்பவருடன் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆரணி பிரிவு அலுவலர் ருக்மணி, குழந்தைகள் நல அலுவலர் அம்சா, ஊர் நல அலுவலர் ஞானம்மாள் போன்றோர் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்களுக்கு கிடைத்த தகவலானது உண்மை என்று தெரியவந்துள்ளது. அதன் பின் அந்தப் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு, அதிகாரிகள் அந்தப் பெண்ணின் பெற்றோரை எச்சரித்துள்ளனர். மேலும் அந்த மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.

Categories

Tech |