கூகுள் நிறுவனத்தின் மெசேஜ் மற்றும் கூகுள் டியோ செயலிகள் மார்ச் 31 ஆம் தேதி முதல் இயங்காது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ‘message, Google duo”செயலிகள் மார்ச் 31ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்படாத ஆண்ட்ராய்டு போன்களில் இயங்காது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில் அதிகரித்து வரும் அங்கீகரிக்கப்படாத போலி ஆண்ட்ராய்டு போன்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.