கூடலூர் அடுத்த மசினகுடியில் யானைக்குத் தீ வைத்த நபர்களை போலீசார் கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒற்றை யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. அந்த யானையை 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தபோது யானைக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
இதில் யானைக்கு தீ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலானது. இதை வைத்து விசாரித்து அப்பகுதியை சேர்ந்த தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளரை கைது செய்தனர். பின்னர் அவர்களை இன்று கூடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர்.