Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அய்யோ..!! “என் மகளும் பேத்திகளும் போன இடம் தெரியலையே” கதறும் தாத்தா…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணையில் ஜல்லிப்பட்டிகுடி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி ரெங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மகேஸ்வரி தனது தந்தை பொன்னுசாமியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி மகேஸ்வரியின் கணவரான ரெங்கசாமி சமாதானம் பேசியதன் மூலம் மகேஸ்வரி கடந்த 19ஆம் தேதி குழந்தைகளை அழைத்து கொண்டு கணவர் வீட்டுக்கு செல்வதாக தந்தையிடம் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை.

இதனால் பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்து உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காத காரணத்தால் வெள்ளியணை காவல்நிலையத்தில் ஏன் மகள் மற்றும் பேத்திகள் சென்ற இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர  வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இரண்டு குழந்தைகளுடன் மாயமான தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |