டெக்ஸ்டைல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-கலைவாணி தம்பதியினர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சதீஷ் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்