பாதவெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதற்கு காரணம் பாதங்களை சுத்தமாக வைக்காததால் தான்.
வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் தண்ணீரில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சோப்பு போடுவது, வீட்டை கழுவி சுத்தமாக்குவது, துணி துவைப்பது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அதிக அளவில் ஈழத்தில் இருக்கின்றனர். உப்பு தண்ணீரில் அதிக அளவில் கால் படுவதால் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு புண்ணாக மாறி வலியை ஏற்படுத்தும். பாதத்தில் உள்ள வெடிப்பு பிரச்சினைகளால் அதிகம் அவதிப்படும் போது சிகிச்சை பெற்றால்தான் குணமாகும்.
பாதத்தில் ஏற்படும் சிறிய அளவு பிளவுக்கு பாத வெடிப்பு என்று பெயர். பாத சருமத்தை மென்மையாக்க பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்து நன்றாக அழுத்தம் கொடுத்து கழுவவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி 20 நிமிடம் வரை பாதங்களை கூறும்படி செய்தால் பாதம் வெடிப்பு நீங்கி விடும்.
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். மருதாணி இலையை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் வைத்திருக்கவும் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் உள்ள விரிசல் சரியாகும். பித்தவெடிப்பு ஆரம்ப காலத்திலிருந்து சரி செய்ய வேண்டிய ஒன்று. அது பெரிதான பின் சரி செய்ய நினைத்தால் அது மிகவும் கஷ்டமாக இருக்கும்.