Categories
மாநில செய்திகள்

9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க திட்டம் – வெளியான தகவல்…!!

9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள  கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் முடிவு எடுக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |