Categories
லைப் ஸ்டைல்

Work From Home-இல் இருப்பவரா…? லேப்டாப் முன்னாடி உட்கார வேண்டியதிருக்கா…. அதிலிருந்து விடுபட சில டிரிக்ஸ் இதோ…!!

வீட்டிலிருந்து லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கான சில டிரிக்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

கொரோனாவானது எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டது. இதன் காரணமாக வேலை பார்ப்பவர்களில் இருந்து பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே வீட்டில் இருந்து தங்களுடைய வேலைகளை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் லேப்டாப் முன்னாடியே எப்போதும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் லேப்டாப் முன்பே இருப்பதால் தலை வலி, கண் பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது .சிலருக்கு இதனால் இரவில் சரியாக தூங்க முடியாத நிலையம் ஏற்படுகின்றது. எனவே அதிக நேரம் லேப்டாப் திரை முன் இருப்பவர்களுக்கு திரையிடல் நேரத்தை குறைக்க சில டிரிக்ஸ் இப்போது பார்க்கலாம்.

நேரத்தை எதற்காக செலவிடுகிறீர்கள் என்பதை முதலில் யோசியுங்கள்:

சிலர் லேப்டாப்பை ஓபன் செய்து விட்டு வேலையை பார்க்காமல் வேறு ஏதாவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படி நேரத்தை வீணாக்கும் போது லேப்டாப் முன் இருக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் கூட லேப்டாப் திரை முன்னாடியே எப்போதும் உட்கார வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது, ஜன்னல் வழியாக எதையாவது வேடிக்கை பார்ப்பது போன்றவற்றில் நேரத்தை குறைத்து அந்த நேரத்தை வேலைக்கு பயன்படுத்தி சீக்கிரமாக வேலையை முடிக்க பார்க்கலாம்.

உங்கள் முன்னுரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்:

உங்களுடைய நேரத்தை திரையில் செயல்படுவது விட முக்கியமானது என்னவென்று யோசியுங்கள். உங்கள் மனதில் உள்ளதை தெளிவாக அட்டவணை போட்டு கொண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் தனிப்பட்ட குறிக்கோள்கள் போன்றவற்றுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வைக்கவேண்டும். இது உங்களுக்கான டென்ஷனை குறைக்கும்.

உங்கள் அறிவிப்புகளை முடக்குங்கள்:

முதலில் வேலைக்கான அனைத்து திட்டங்களையும் பட்டியலிட்டு தொலைபேசியில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு அழைப்புகளாக அந்த வேலையை முடித்துவிடலாம். பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மொபைல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அந்த நேரங்களில் திரையில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து பிற செயல்பாடுகள் கவனத்தை செலுத்தி வரலாம். வேலை நேரம் முடிந்த உடன் பணி மின்னஞ்சல்களை தவிருங்கள் .இது உங்கள் திரையிட நேரத்தை குறைக்க உதவும்.

ஸ்கிரீன் ஆப் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் பணித்திரையில் கேம் விளையாடுதல் மற்றும் யூடியூப் வீடியோக்களை பார்ப்பதற்கு பதிலாக சிறிது நேரம் திரையில் இருந்து விலகி இருப்பது நல்லது. இதற்கு பதிலாக எல்லோரும் ஒன்றாக சேர்ந்து காபி குடிப்பது, சிறிது நேரம் வாக்கிங் செல்வது போன்ற செயல்களை செய்யலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடைவெளி எடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் ஒரே திரையில் மட்டும் பாருங்கள்:

ஒரு குறிப்பிட்ட திரையில் மட்டுமே பலருக்கு வேலை செய்வது என்பது கடினம் தான். ஆனால் நீங்கள் பல ஸ்கிரீன் ஐ ஓபன் செய்து வைத்து பயன்படுத்துவது நல்லது கிடையாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே ஒரே நேரத்தில் ஒரே திரையில் வேலை செய்ய அனைவரும் முயற்சி செய்யவேண்டும். பல திரைகளில் வேலை செய்வதால் மூளையை அதிகமாக தூண்டுகிறது. மனச்சோர்வை உருவாக்கும் ன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |