Categories
அரசியல் தேசிய செய்திகள்

கையெழுத்திடாமல் சென்ற ராகுல்…. நினைவுபடுத்திய ராஜ்நாத் சிங் ……!!

வயநாடு MP_யாக பதவியேற்ற பின் ராகுல் காந்தி கையெழுத்திடாமல் சென்றதை பார்த்த ராஜ்நாத் சிங் கையெழுத்திடுமாறு நினைவூட்டினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக  வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது.

Rahul Gandhi Forgets To Sign After Parliament க்கான பட முடிவு

இந்நிலையில் நேற்று  17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்  தொடங்கியது. இதில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து  இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் உரையாற்றிய பின் புதிய உறுப்பினர்களுக்கு வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

When Rahul Gandhi Forgets To Sign After Parliament க்கான பட முடிவு

அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் சென்றார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டுச் செல்லுமாறு சொன்னதையடுத்து ராகுல் காந்தி கையெழுத்திட்டுவிட்டு சென்றார் .

Categories

Tech |