Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ராட்சச அலை இழுத்து சென்றது…. பறிபோன பெண்ணின் உயிர்… தடைப்பட்ட ஆன்மீக பயணம்…!!

ஆன்மீக யாத்திரையாக வந்த ஒரு பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடந்து வரும் தைப்பூச விழாவிற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெண்ணை உருண்டைகள், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற சின்னங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களில் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது, பொள்ளாச்சியில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்ற பெண்ணை ராட்சச அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. இதனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலானது சிறிது நேரத்திலேயே கரை ஒதுங்கிவிட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று கடல் சீற்றமானது அதிகமாக இருப்பதால் குளித்துக்கொண்டிருந்த மற்றவர்களை எச்சரித்து கரைக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் பலர் அலட்சியமாக கடலில் குறித்துள்ளனர்.

அதன்பின் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்த பிறகு கடலில் குளிப்பதை நிறுத்திவிட்டு அவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். இதனைதொடர்ந்து உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவருடன் வந்தவர்கள் மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பி விட்டனர்.

Categories

Tech |