Categories
லைப் ஸ்டைல்

மூல நோய்க்கு பன்றி இறைச்சி மருந்தா…? எப்படி குணமாகும்…. வாங்க பார்க்கலாம்…!!

பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகுமா என்பதை நாம் இப்பொது பார்க்கலாம்.

நம்முடைய உடலில் அசுத்தமான ரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறை ரத்தக்குழாய்களில்  குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் இருக்கின்றன. இந்த வாழ்வில் தான் சிறை குழாய்களில் தேவையில்லாத ரத்தத்தை தடுக்கின்றன.ஆனால் நம்முடைய ஆசன வாயிலிருந்து உடலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டும் இந்த வால்வு கிடையாது. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாக அங்கு சாதாரணமாகவே அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த அழுத்தம் சிறிது அதிகமானாலும் கூட ரத்தம் தேங்க சிறிய பலூன் போல மாறுவதை தான் மூல நோய் என்று கூறுகிறோம் .

காரணங்கள்:

மலச்சிக்கல் காரணமாக நம்முடைய உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற முக்கி அழுத்தம் கொடுக்கும் போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோய் ஏற்படுகிறது.

சிறுநீர் அடைப்பு காரணமாகவும் மூலம் உண்டாகும்.

வெளி மூலம் என்பது ஆசன வாயின் வெளியே ஏற்படுவது. உள்மூலம் என்பது ஆசன வாயின் உள்ளே ஏற்படுவது ஆகும். இதை ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் சுலபமாக சரி செய்துவிடலாம்.

பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகுமா?

பன்றி கறி சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும் என்று சிலர் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது. 100 கிராம் பன்றி இறைச்சியில் 26 கிராம் புரதமும், 18 கிராம் கொழுப்பும் இருக்கிறது. மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நார்ச் சத்து தேவைப்படும். ஆனால் இதில் நார்ச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் கிடையாது. ஆகவே இது மூலநோயை குணப்படுத்தும் சாத்தியம் கிடையாது.

மூலநோய்க்கு மருந்துகள்:

தேற்றான் கொட்டை லேகியம், கருணைக்கிழங்கு லேகியம் ஆகியவை சிறந்த சித்த மருத்துவமாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிகபடியான காரம், உப்பு, புளி, மசாலா உணவுகள்.

எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்:

கீரை வகைகளை தாலிக்கீரை, வெந்தயக் கீரை, பாலக்கீரை, கருணைக்கிழங்கு, பாகற்காய் சுண்டைக்காய், கோவைக்காய்.

Categories

Tech |